ஆதரிக்கப்படும் சாதனங்களில் YouTube TVயைப் பார்த்தல்

YouTube TVயைக் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி, ஸ்ட்ரீமிங் சாதனம் அல்லது மொபைல் சாதனத்தில் பார்க்கலாம் (குறிப்பிட்ட மொபைல்கள் மற்றும் டேப்லெட்கள் உட்பட).

உங்கள் ஸ்மார்ட் டிவியிலோ ஸ்ட்ரீமிங் சாதனத்திலோ YouTube TVயை எப்படிப் பார்ப்பது? - அமெரிக்காவில் மட்டும்

இந்தக் கட்டுரையில், YouTube TVயைப் பார்க்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு சாதனங்களையும் பிளாட்ஃபார்ம்களையும் குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம் (சிஸ்டம் தேவைகள் உட்பட).

YouTube TV ஆதரிக்கப்படும் சாதனங்கள்

உங்கள் டிவியில் YouTube TVயைப் பார்க்க, குறிப்பிட்ட சாதனங்களில் நீங்கள் YouTube TV ஆப்ஸைப் பதிவிறக்கலாம்/திறக்கலாம்:

கேம் கன்சோல்கள்
  • PlayStation 5
  • PlayStation 4
  • Xbox Series X
  • Xbox Series S
  • Xbox One X
  • Xbox One S
  • Xbox One
ஸ்மார்ட் டிவிகள் Toshiba, Insignia, Element, Westinghouse ஆகிய பிராண்டுகள் தயாரித்த Fire TV Edition ஸ்மார்ட் டிவிகள்
Hisense ஸ்மார்ட் டிவிகள் (குறிப்பிட்ட மாடல்கள்)
LG ஸ்மார்ட் டிவிகள் (2016 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் மட்டும்)
Roku டிவிகள் (அனைத்து மாடல்களும்)
Samsung ஸ்மார்ட் டிவிகள் (2017 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் மட்டும்)
Vizio SmartCast டிவிகள் (குறிப்பிட்ட மாடல்கள்)
ஸ்ட்ரீமிங் சாதனங்கள் Android TV
(குறிப்பு: Android மொபைல் பதிப்பில் இயங்கும் டிவிகள் ஆதரிக்கப்படாமல் போகலாம்)
Apple TV (4வது தலைமுறை & 4K)
Google TVயுடன் Chromecast
  • Fire TV Stick (3வது தலைமுறை)
  • Fire TV Stick Lite
  • Fire TV Stick (2வது தலைமுறை)
  • Fire TV Stick 4K
  • Fire TV Cube
  • Fire TV Cube (1வது தலைமுறை)
Google TV
(குறிப்பு: அனைத்து Google TVகளும் ஸ்ட்ரீமிங் மீடியா சாதனங்களும்
Peloton
  • Roku Smart Soundbar
  • Roku Ultra
  • Roku Ultra LT
  • Roku Streaming Stick+
  • Roku Streaming Stick+ HE
  • Roku Streaming Stick (3600x மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள்)
  • Roku Express+
  • Roku Express
  • Roku Premiere+
  • Roku Premiere
  • Roku 4
  • Roku 3 (4200x, 4230x)
  • Roku 2 (4210x)
TiVo Stream 4K
Xfinity Flex சாதனங்கள்
இவற்றைப் பயன்படுத்தியும் உங்கள் டிவியில் YouTube TVயை ஸ்ட்ரீம் செய்யலாம்:
  • Chromecast சாதனங்கள்.
    கவனத்திற்கு: முதல் தலைமுறை Chromecast சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், அதிகளவிலான பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது திறப்பதற்கு 30 வினாடிகள் வரை ஆகலாம்.
  • Chromecast Built-in டிவிகள்
  • Apple TVக்கான AirPlay
  • Google ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள்

சிஸ்டம் தேவைகள்

Android சாதனங்களுக்கான சிஸ்டம் தேவைகள்

  • பெரும்பாலும் Android L சாதனங்களிலும் அதற்குப் பிந்தைய சாதனங்களிலும் (மொபைல்கள், டேப்லெட்கள் உட்பட) YouTube TV இயங்கும். 
  • உங்கள் சாதனம் ஆதரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய Play Storeரில் இருந்து YouTube TV ஆப்ஸைப் பதிவிறக்குங்கள். உங்கள் சாதனம் ஆதரிக்கப்படவில்லை என்றால் ஆப்ஸைப் பதிவிறக்க முடியாது மற்றும் நீங்கள் ஒரு விழிப்பூட்டலைப் பெறுவீர்கள். "இது உங்கள் சாதனத்துடன் இணக்கமாக இல்லை." 

உங்கள் சாதனைத்தைப் புதுப்பித்தல்

சிறந்த வீடியோ இயக்கத்திற்கான அனுபவத்தைப் பெற உங்கள் சாதனத்தை Androidன் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்:

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. சிஸ்டம் புதுப்பிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. புதுப்பிப்பு இருந்தால், பதிவிறக்கி நிறுவு என்பதைத் தட்டவும்.

YouTube TVயைப் பார்ப்பதில் ஏற்படக்கூடிய சாதனச் சிக்கல்களைக் கண்டறிந்து திருத்துதல் 

என்னால் ஆடியோவைக் கேட்க முடிகிறது. ஆனால் வீடியோவைப் பார்க்க முடியவில்லை.

Safari, Chrome போன்ற உலாவியைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் பார்க்கும்போது ஆடியோ பிளேயாகின்ற அதே வேளையில் கருப்புத் திரை தோன்றினால், வெளிப்புற டிஸ்ப்ளே சாதனங்களின் இணைப்பை நீக்கிப் பாருங்கள்.

எனது Roku பிளேயரில் YouTube TV பார்ப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.

உங்கள் Roku பிளேயரில் HDCP பிழை ஏற்பட்டால், உங்கள் டிவியில் 'HDMI அல்ட்ரா HD வண்ணம்' எனும் அமைப்பை இயக்கவும்.
உங்கள் Roku பிளேயரில் வீடியோ விட்டுவிட்டு பிளேயானால், Rokuவில் உள்ள "காட்சி வகை" அமைப்புகளில் HDRரை முடக்கவும்:
  1. அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. காட்சி வகை அதன் பிறகு 4K 30 Hz TV, 4K 60 Hz TV அல்லது 4K HDR 60 Hz என்பதைத் தேர்வுசெய்யவும்.

எனது Apple TVயில் YouTube TV பார்ப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.

1.13.1 மற்றும் அதற்குப் பிந்தைய ஆப்ஸ் பதிப்புகளைக் கொண்ட Apple TV பயனர்களுக்கு, சேனல்களை மாற்றும்போதும் விளம்பர மாற்றங்களின்போதும் காலியான திரையோ விட்டுவிட்டு தெரியும் திரையோ தோன்றக்கூடும்.
வீடியோ தாமதங்களைக் குறைக்க, டைனமிக் ரேஞ்சைப் பொருத்து எனும் விருப்பம் இயக்கத்தில் உள்ளபோது, இயல்புநிலை வீடியோ வடிவத்தை SDR என்று அமைத்துப் பார்க்கவும். இந்த அமைப்பை மாற்ற:
  1. அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. வீடியோ மற்றும் ஆடியோ அதன் பிறகு வடிவம் என்பதைத் தேர்வுசெய்யவும் அதன் பிறகு (ஏதேனும் SDR விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்).

Apple TVயில் ஆடியோ மற்றும் வீடியோ அமைப்புகளை மாற்றுவது எப்படி என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

செயல்திறனை மேம்படுத்த, Apple TVயில் “டைனமிக் ரேஞ்சைப் பொருத்து” என்பதையும் முடக்கலாம். டைனமிக் ரேஞ்சைப் பொருத்துதலை முடக்க: 

  1. அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. வீடியோ மற்றும் ஆடியோ அதன் பிறகு உள்ளடக்கத்தைப் பொருத்து அதன் பிறகு டைனமிக் ரேஞ்சைப் பொருத்து அதன் பிறகு முடக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.

டைனமிக் ரேஞ்சைப் பொருத்துதல், ஃப்ரேம் வீதத்தைப் பொருத்துதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8360252445655453926
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1025958
false
false